சென்னை நிகழ்வுகள். . .

சென்னையில் கடந்தவரத்திலும் இந்த வாரத்திலும் பதிவு செய்யப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பல்வேறு வேலைப் பணிகளாலும் என்னால் பதிவிட முடியவில்லை.

*தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இரங்கல் கூட்டம்

*சென்னைத்திரைப்பட விழா

*இன்குலாபின் நாடகங்களின் விழா
இந்த விழா 22,23,24 ஆம் திகதிளில் சென்னை தி.நகர் தியாகராச அரங்கில் நடைபெறுகிறது.அவ்வை நாடகம் இன்று நடைபெற்றது.23 ஆம் திகதி மணிமேகலையும்,24ஆம் திகதி குறிஞ்சிப்பாட்டு ஆகிய நாடகங்களும் நடைபெறும்.

*நகுலன் பற்றிய புகைபடக் கண்காட்சியும் நகுலன் நூல்களின் வெளியிட்டுவிழாவும்


எனப் பலவற்றைச் சொல்ல நினைத்தேன் முடிய வில்லை.இருப்பினும் வில்வரின் நினைவுகூட்டம் பற்றிய பதிவினத்தருகிறேன்.நகுலனின் புகைப் படங்களுடன் அவர் குறித்தும் நிகழ்வு குறித்தும் பின்னர் எழுதுகிறேன்.

* வில்வரத்தினம் நினைவுக் கூட்டம்

சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக அரங்கு.

பல்கலைக்கழக மாணவர்களின் கவிதை ஆற்றுகையுடன் இந்த கூட்டம் ஆரம்பமாகியது.அதன் பின்னர் வாசுகி செயபாலன்(வ.ஐ.ச.செயபாலனின் மனைவி) அவர்கள் வில்வரின் பாடல்களைப் பாடினார்.அதன் பின்னர் எழுத்தாளர்கள் செயப்பிரகசம்,ஞானக்கூத்தன்,கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி,கவிஞர்கள் இன்குலாப்,வ.ஐ.ச.செயபாலன்,அறிவுமதி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் வீ.அரசு தலைமை தங்கினார்.இறுதியிலும் வாசுகி செயபாலன் வில்வரின் கவிதைகளைப் பாட நிகழ்வு நிறைவு பெற்றது.

குறிப்பு:
இந்த நிகழ்வு முழுமையாக என்னால் ஒளிப்பதிவு செய்யப் பட்டது. பல்கலைக்கழகத்தின் வேண்டுதலுக்கு இணங்க அவர்களின் ஒத்துழைப்போடு இதன் சிறு தொகுப்பு உள்ளடங்கலாக வாசுகி பாடிய வில்வரின் பாடல்கள் மற்றும் தேர்ந்தெடுத்த வில்வரின் கவிதைகளை வைத்து 45 நிமிட நேரம் கொண்ட ஒரு ஆவணத்தினைக் கொண்டு வரவுள்ளேன். முடிந்தால் அதன் ஒரு பகுதியை இணையத்தளத்திலும் போடலாம். மற்றும் மதி பதிவு செய்திருந்த வில்வரின் குரலையும் வேறுயாரிடமாவது இதைபோன்ற வில்வரின் பதிவுகள் இருந்தால் அவற்றையும் முன் அனுமதியோடு இணைத்துக் கொள்ளலாம் என்றுள்ளேன்.முடியுமானவர்களிடமிருந்து வழமை போல் உதவியை எதிர்பார்க்கிறேன்.

6 மறுமொழிகள்:

Anonymous அநாநி said...

நீங்கள் இயக்குனர் பேரரசு விடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக கேள்விப் பட்டேன். உண்மையா

December 22, 2006 9:56 AM  

Blogger சோமி said...

ஒரு நல்ல விசயத்தை நாலு பேருக்கு சொல்ல நினைச்சா பேரரசு பெயரை சொல்லி கிலியூட்டினா நான் இன்னாத்த செய்றது.

December 22, 2006 11:56 PM  

Blogger ஒரு பொடிச்சி said...

//இருப்பினும் வில்வரின் நினைவுகூட்டம் பற்றிய பதிவினத்தருகிறேன்.நகுலனின் புகைப் படங்களுடன் அவர் குறித்தும் நிகழ்வு குறித்தும் பின்னர் எழுதுகிறேன்.//
thanks for the info.
pls do write abt nahulan in details.

December 23, 2006 12:31 AM  

Blogger கானா பிரபா said...

தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

December 23, 2006 3:22 AM  

Blogger வசந்தன்(Vasanthan) said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி.

December 23, 2006 4:19 AM  

Blogger மலைநாடான் said...

நல்ல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி!

December 23, 2006 5:42 AM  

Post a Comment

தொடுப்புகள்">


இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு